விஜய் வசந்த், தாரகை கத்பர்ட் வெற்றி திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மார்த்தாண்டம், ஜூன் 5: நாடாளுமன்ற தேர்தலில் குமரியில் காங். வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக சார்பில் மார்த்தாண்டத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங். வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் திமுக சார்பில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பட்டாசும் கொளுத்தப்பட்டது.இதில் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் அருள்ராஜ், வர்த்தக அணி துணைத்தலைவர் தினகர், துணைச்செயலாளர் ஷாஜிலால், நிர்வாகி ராஜு, மாகின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement