தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ராசிபுரம், ஜூலை 9: ராசிபுரத்தில் தேமுதிக பூத் கமிட்டி மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், தொழிற்சங்க பேரவை தலைவர் இளங்கோவன் கலந்துகொண்டு, 2026 தேர்தல் களம் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணை செயலாளர் செல்வராஜ், மாநில கலை இலக்கிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட அவை தலைவர் சௌந்தரராஜன், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பேரூர் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது