டாஸ்மாக்கில் தகராறு: இருவர் மீது தாக்குதல்
சாத்தான்குளம், ஜூன் 20: சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி (32). இவரும், இவரது நண்பர் மாமுனியும் கடந்த 17ம் தேதி இரவு 9 மணிக்கு பேய்க்குளம் கலைஞர் நகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு மதுபான விலையில் வித்தியாசம் இருந்ததால் மாமுனி, அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர்கள் முருகேசன், பெருமாள் ஆகியோர் மணி, மாமுனி ஆகியோரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மணி சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்கு பதிந்து முருகேசன், பெருமாள் ஆகியோரை தேடி வருகிறார்.
Advertisement
Advertisement