மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூன் 25: மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
Advertisement
ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்த ஒன்றிய அரசின் குடிமை பணி நியமனங்களுக்கான தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளின் செயற்கை உறுப்புகள் பறிக்கப்பட்டு மனித உரிமை மீறல் நடந்ததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் கோஷமிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பாலா மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement