இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Advertisement
பழநி, அக். 14: பழநி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (அக். 14) காலை 11 மணிக்கு நடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு மின்விநியோகம் தொடர்பான குறைகளை கேட்க உள்ளனர். எனவே, பழநி கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாமென மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement