மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
Advertisement
திண்டுக்கல், அக். 14: திண்டுக்கல்லில் மாவட்ட அனைத்து மொத்த முட்டை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை முட்டை விற்பனையாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தென் மண்டல முட்டை விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தினசரி முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முட்டை விற்பனை நல வாரியம் தமிழக அரசு அமைக்க வேண்டும், பண்ணை உரிமையாளர்கள் நேரடியாக முட்டை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 7ஆம் தேதி, முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement