நத்தம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
Advertisement
நத்தம், அக். 13: நத்தம் அருகே சிறுகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் வீரமுத்து. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதை பார்த்தவர்கள் இதுகுறித்து உடனே நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் அந்த மலைப்பாம்பை அடர் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
Advertisement