கும்பாபிஷேகம்
தேவாரம், டிச.1: பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், பல்லவராயன்பட்டி ஆகிய ஊர்களுக்கு நடுவே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுயம்பு மல்லிங்கேஸ்வரர் கோயிலில் ரூ.54 லட்சம் மதிப்பில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன. கோயிலின் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 27ம் தேதி கிரிவலம் நடைபெற்றது. முதன் முறையாக நடந்த கிரிவலத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Advertisement
நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிவாலய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். இதில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement