திண்டுக்கல் மாநகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்
திண்டுக்கல், அக். 30: திண்டுக்கல் மாநகராட்சி 32வது வார்டு பகுதியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் ஆர்ஆர் புதூர் ரோடு உள்ள பால நாகம்மா கோவில் அருகே நடந்தது. திமுக மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
Advertisement
அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் குடிநீர், தெருவிளக்கு, சாலை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் வசதிகளை செய்து தருவதுடன் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துமாறு தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற துணை மேயர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில் 32வது வார்டு செயலாளர் முகமது ரபிக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Advertisement