திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
திண்டுக்கல், அக். 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இதையடுத்து பொது அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கிணை பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும் திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கொடைரோடு டாஸ்மாக் கடை, பள்ளப்பட்டி சிப்காட் கடை, கிருஷ்ணாபுரம் கடை விளாம்பட்டி கடை, அணைப்பட்டி கடை, விருவீடு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கடை, விருவீடு சாந்திபுரம் கடை ஆகிய அரசு மதுபான கடைகள், அத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபான கூடம் இன்று முழுவதும் விற்பனையின்றி தற்காலிகமாக மூடப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.