பழநி எரமநாயக்கன்பட்டியில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
பழநி, செப். 27: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முதுநிலை வேளாண் அலுவலர் தங்கவேலு வரவேற்று பேசினார்.
Advertisement
வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் சதீஷ்குமார் மக்காச்சோள உயர் விளைச்சல், களை மற்றும் பூச்சிகளின் கட்டுப்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைப்பை, களை மற்றும் பூச்சி கட்டுப்பாடு மருந்துகள் வழங்கப்பட்டது. இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரன் நன்றி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Advertisement