பழநியில் கல்லூரி மாணவிகளுக்கு யோகா, தியான பயிற்சி
பழநி, ஆக. 27: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு மதிப்பு கல்வி பாடத்திட்டத்தின் பிரிவில் யோகா, தியானம், காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
Advertisement
பழநி அறிவு திருக்கோயில் மனவள கலை ஆன்மீக மன்ற ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இம்முகாமில் யோகா மற்றும் மனவள கலையால் ஏற்படும் நன்மைகள், யோகாவை பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நல்ல மனநலம், உடல் நலம், நீடித்த ஆயுள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement