சாணார்பட்டி மருனூத்து முகாமில் மனுக்கள் குவிந்தன
கோபால்பட்டி, செப். 26: சாணார்பட்டி ஒன்றியம் மருனூத்து ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. திமுக மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
இதில் சிலரது மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், ஒன்றிய செயலாளர்கள், தர்மராஜ், மோகன், ஜான் பீட்டர், பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் கட்சி நிர்வாகிகள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Advertisement