35 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
திண்டுக்கல், நவ. 22: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மூத்த தம்பதிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினார். இதில் 2,500 ரூபாய் மதிப்பிலான வேஸ்ட்டி, சட்டை, புடவை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம்.
கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. உதவி ஆணையர் லட்சுமி மாலா, தாடிக்கொம்பு சௌந்தர்ராஜா பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஷ் பாலாஜி, மற்றும் உதவி ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், மூத்த தம்பதியரின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.