மனநலத்தைப் பாதுகாக்க ஹெல்த்தி டயட் அவசியம்
பழநி, ஆக. 22: மனநலம் மேம்பாடு குறித்து டாக்டர்கள் கூறியதாவது: காற்று, மண், நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்கள் வழி சிகிச்சை தருவதே இயற்கை முறை மருத்துவ சிகிச்சையாகும். மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் வழங்கப்படும் பலதரப்பட்ட சிகிச்சைகளில் மனநலம் மேம்படுத்தும் சிகிச்சைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
Advertisement
கவுன்சிலிங் மற்றும் உணவில் கவனம் காட்டுகிறோம். மனநலம் காப்பதில் உணவின் பங்கு முக்கியமானது. மன அழுத்தம், வயிற்றுப்பிரச்னை ஒன்றை ஒன்று பாதிக்கும். வயிறு மற்றும் மூளை இரண்டும் நேரடி தொடர்புடையன. உணவு உட்கொள்வதில் நேரம் தவறாமை குறிப்பாக இரவு 8மணிக்குள் உணவருந்தி முடித்து, தூக்கத்திற்கு செல்வது நல்லது. நல்ல தூக்கமும், உரிய உணவு பழக்கமுமே மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’’ என்றனர்.
Advertisement