வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
நிலக்கோட்டை,நவ. 21: நிலக்கோட்டையை அடுத்த, விளாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் ராஜதுரை (23) தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜதுரையும் அந்த இளம் பெண்ணும் மொபைலில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.
இத்தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதையடுத்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜதுரையை செருப்பால் அடித்து தன் மகளிடம் பேச கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை நேற்று காலை சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜதுரை தற்கொலைக்கு காரணமான அந்த பெண்ணின் தந்தையை கைது செய்ய வலியுறுத்தி, வாலிபரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,