விவசாயியை தாக்கிய 4 பேர் கைது
நத்தம், ஆக. 21: நத்தம் அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). விவசாயி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுச்சாமி (49) என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்று இது எங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி செல்வராஜிடம் வாக்குவாதம் செய்தனர்.
Advertisement
தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் செல்வராஜை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து செல்வராஜ் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து கண்ணுச்சாமி, வெள்ளத்தாய், வெள்ளையம்மாள், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement