பழநியில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
பழநி, செப். 19: பழநி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் பயண பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
Advertisement
அதில், ரயில் நின்றவுடன் ஏற வேண்டும், அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் விற்கும் உணவு பண்டங்களை மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும். உடன் வருபவர்கள் தருகின்ற உணவுகளை வாங்கி உண்ணக்கூடாது என வலியுறுத்தப்பட்டன.
Advertisement