வடமதுரை அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி
வடமதுரை, அக். 18: வடமதுரை அருகேயுள்ள சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்தவர் அப்பாச்சாமி (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த அக்.15ம் தேதி டூவீலரில் வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பாச்சாமி நிலை தடுமாறி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
                 Advertisement 
                
 
            
        இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
                 Advertisement 
                
 
            
        