திண்டுக்கல் கூட்டுறவு பண்டகசாலை மூலம் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை
திண்டுக்கல், அக். 17: டிடி 487 திண்டுக்கல் மாவட்ட (அபிராமி) நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம் சுயசேவை பிரிவு அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண், பெண் இருபாலர்களுக்கும் புதுரக ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பண்டகசாலைக்கு (அபிராமி) சொந்த தயாரிப்பான No.1 இராஜபோகம், பொன்னி அரிசி மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
Advertisement
தீபாவளி பண்டிகைக்கு தேவையான 32 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய (Branded Item) தொகுப்புகள் சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் உயர்தர பட்டாசுகள் Standard, இரட்டை கிளி நிறுவனத்திடம் நேரடியாக கொள்முதல் செய்து மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement