வெடிபொருளுடன் 2 பேர் கைது
திருப்புவனம், அக். 17: சிவகங்கை மாவட்டம், பூவந்தி பகுதியில் கியூ பிரிவு எஸ்ஐக்கள் சுப்பிரமணி, குணசேகரன், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசனூர் பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேலம் சங்ககிரி புல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (42), திண்டுக்கல் வத்தலக்குண்டு பண்ணைப்பட்டியை சேர்ந்த சத்யராஜ் (33) என்பதும், திருப்பாச்சேத்தி மீனாட்சிபுரத்தில் தனியார் தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் பாறையை தகர்ப்பதற்காக சட்ட விரோதமாக 195 ஜெலட்டின் குச்சிகள், 325 மீட்டர் வயர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் பூவந்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவற்றை விற்பனை செய்த மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கிடங்கு உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.