கோஷ்டி மோதல்: 6 பேர் கைது
நத்தம், செப். 17: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடி கிழக்குதெருவை சேர்ந்தவர் வல்லரசு (25). இவர் வடக்கு தெரு பகுதியில் டூவீலரை வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் (20) என்பவர், ‘ஏன்டா வண்டியை வேகமாக ஓட்டி செல்கிறாய்’ எனக் கேட்டுள்ளார். இதில் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஊரின் மந்தை முன்பு மோதலாக மாறியுள்ளது.
Advertisement
இதில் இரு தரப்பை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த சரவணன் (20), சந்தோஷ்குமார் (19), செல்வராஜ் (21), காளீஸ்வரன் (20), கருப்பையா (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement