நள்ளிரவில் காருக்கு தீ வைப்பு
நிலக்கோட்டை, செப். 17: செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா (42),சபிபுல்லா (40), இந்தாதுல்லா (35) பரக்கத்துல்லா (32). இவர்கள் நான்கு பேரும் சித்தையன்கோட்டை மற்றும் திண்டுக்கல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். 4 சகோதரர்களும் ஒரே வீட்டில், ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரக்கத்துல்லாவுக்கு சொந்தமான காரை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த பரக்கத்துல்லா குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், காருக்குள் மதுபாட்டில்கள் பெட்ரோலுடன் இருந்ததால், பெட்ரோல் குண்டு வீசப்பட்டு காருக்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில், பாட்டில்களின் துகள்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.