கன்னிவாடியில் ஹைமாஸ் லைட் அமைக்க பூமி பூஜை
ரெட்டியார்சத்திரம், செப். 15: கன்னிவாடியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் காவல் துறையினர் குடியிருப்பு முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஹைமாஸ் லைட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம், துணை தலைவர் கீதா முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.
Advertisement
மேற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி தலைமை வகித்து பூமி பூஜை செய்து ஹைமாஸ் லைட் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூர் செயலாளர் சண்முகம், பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சர்புதீன், மருதாயம்மாள், வரி வசூலர் ராமு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement