கோபால்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியது பஸ்
கோபால்பட்டி, ஆக. 15: கோபால்பட்டி அருகே வி.எஸ்.கோட்டையில் இருந்து நத்தம் நோக்கி 32 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
டி.பள்ளபட்டி துர்க்கை அம்மன் கோயில் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணித்தவர்கள் காயங்களின்றி தப்பினர்.