நத்தத்தில் வீடு கட்டும் பணி ஆணை வழங்கல்
நத்தம், நவ. 13: நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார்.
Advertisement
தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்து பணி ஆணை வழங்கி திட்டம் குறித்து பயனாளிகளுக்கு எடுத்து கூறினார். இதில் ஒரு நபர் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 45 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி மற்றும் கவுன்சிலர்கள் பணியாளர்கள், ஊழியர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் பிரசாத் நன்றி கூறினார்.
Advertisement