ஒட்டன்சத்திரத்தில் சோளம் மேலாண்மை செயல் விளக்கம்
ஒட்டன்சத்திரம், செப். 12: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலக உழவர் பயிற்சி நிலையம் சார்பில் மக்காச்சோள பயிர் மேலாண்மை செயல் விளக்க முகாம் நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்தார். இம்முகாமில் விவசாயிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மக்காச்சோள பயிர் மேலாண்மை மற்றும் விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
Advertisement
இதில் காந்திகிராம வேளாண் விஞ்ஞானி ஷாஹீன் தாஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரமாலா, வேளாண்மை அலுவலர் நலமுத்துராஜா, துணை வேளாண்மை அலுவலர் தியாகராஜன், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ரேஷ்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
Advertisement