வடமதுரை விபத்தில் விவசாயி பலி
வடமதுரை, செப். 12: வடமதுரை அருகே சாலையூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (65). விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிக்க சென்றார். திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் ஓரமாக நடந்து சென்ற போது, வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அவர் மீது மோதியது.
Advertisement
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாண்டியராஜன் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலுச்சாமியின் மகன் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement