வத்தலக்குண்டுவில் சப்த கன்னிமார் கோயில் திருவிழா
வத்தலக்குண்டு, அக். 11: வத்தலக்குண்டு காந்தி நகர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பேசும் சப்தகன்னிமார் கோயிலில் புரட்டாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 48ம் நாள் மண்டல அபிஷேக பூஜை, யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து பேசும் சப்த கன்னிமாருக்கு ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டாடைகள் நாணல் புல் கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், கருப்பணசாமி, முனியாண்டி, நாகம்மாள், வேட்டைக்காரன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கூட்டு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சக்திகுட்டி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். ெதாடர்ந்து உச்சி காலபூஜை செய்து படையலிட்டு அருள்வாக்கு கூறப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் கறி விருந்து நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.