மண்புழு உர உற்பத்தி பயிற்சி முகாம்
பழநி, செப். 11: பழநி அருகே ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான மண்புழு உர உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
Advertisement
முகாமில் வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சதீஷ்குமார் கலந்து கொண்டு மண்புழு உரத்தின் முக்கியத்துவம், பயன்பாடுகள் மற்றும் சில்பாயின் உரப்பை மூலம் மண்புழு உர உற்பத்தி தயாரிப்பு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து முகாமில் விவசாயிகளுக்கு சில்பாயின் மண்புழு உரப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Advertisement