கொடைக்கானலில் இளம்பெண் தற்கொலை
கொடைக்கானல், செப். 10: கொடைக்கானல் கணேசபுரத்தை சேர்ந்தவர் அனிதா (23). இவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டிக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்லபாண்டியன் இறந்து உள்ளார். இதையடுத்து அனிதாவிற்கு கொடைக்கானலை சேர்ந்த முத்துவீரக்குமார் என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
Advertisement
அனிதாவிற்கும் முத்து வீரக்குமாருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதமே ஆவதால் இதுகுறித்து ஆர்டிஓ திருநாவுக்கரசு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement