அய்யலூர் சிறப்பு முகாமில் மனுக்கள் குவிந்தன
வேடசந்தூர், அக். 9: அய்யலூரில் தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நேற்று வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமை வகித்தார். இம்முகாமில் வருவாய்த்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 13 துறை அதிகாரிகள் பொது மக்களிடம் துறை ரீதியான கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். இம்முகாமில் எம்எல்ஏ ேபசியதாவது: முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையில் ஆட்சி செய்து வருகிறார். அய்யலூர் பேரூராட்சியில் அதிக மலைக்கிராமங்கள் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றத்துக்கு பிறகு மலைக்கிராம மக்களுக்காக எண்ணற்ற தேவைகளை செய்து வருகிறது.
குறிப்பாக அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, பாலங்கள் போன்றவைகள் செய்துள்ளது. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் அதிகமாக கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என பேசினார். இந்நிகழ்ச்சியில் வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் பேரூராட்சி மன்ற தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, மற்றும் 15 வார்டு கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகளான வேடசந்தூர் வட்டாட்சியர் சுல்தான், அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பத்மலதா மற்றும் 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.