திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் வார விழா
திண்டுக்கல், அக். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் வார விழா நடைபெற்று வருகிறது என திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு அக்.10 வரை அஞ்சல் வார விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது. நேற்று தபால் தலை சேமிப்பு தினம். இன்று உலக அஞ்சல் தினம். நாளை வாடிக்கையாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் மாவட்டத்தில் உள்ள 72 அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் சேவை. ஆயுள் காப்பீடு திட்டம், பிரிமியம் கணக்கு துவங்குவதற்கான விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு, மொபைல் இணைப்பு உள்ளிட்ட சிறப்பு முகாம் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.