திண்டுக்கல்லில் அரசியல் கட்சியினர் ஆய்வு கூட்டம்
திண்டுக்கல், ஆக. 9: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், இதர அமைப்புகள் மூலம் தெருமுனை பிரசாரம், பொது கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி காவல் துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் இதர அமைப்பினருடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பிரதீப் முன்னிலை வகித்தார். கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட இடங்கள் நீங்கலாக, அரசியல் கட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிதிதிகள் ஆகியோர்களால் தெருமுனை பிரசாரம், பொது கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு புதிதாக தெரிவிக்கப்பட்ட இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்களால் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். என முடிவு செய்யப்பட்டது. இதில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.