நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
நத்தம், ஆக. 7: நத்தம் அருகே வத்திபட்டி செக்கடிபட்டியை சேர்ந்த அழகு என்பவரது மனைவி ராமுத்தாய் (40). இவருக்கும், இவரது மாமியார் பெரியகாத்திக்கும் சொத்து சம்மந்தமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகாத்தி அரிவாளால் ராமுத்தாயை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த ராமுத்தாயை அங்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.