உறுப்பு கல்லூரிகள் பொதுக்குழு கூட்டம்
கொடைக்கானல், ஆக. 7: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 கலை கல்லூரிகளுக்கான 2025- 2026ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜம் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா தொடக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் கலா தலைமை வகித்து பேசியதாவது, ‘மாணவிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற்று வாழ்வில் உயர வேண்டும்.
இதேபோல் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதிக்க வேண்டும்’ என்றார். இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி மற்றும் 13 கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விளையாட்டு இயக்குநர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள். அன்பு மேரி நன்றி கூறினார்.