தீ வைத்த 21 பேர் மீது வழக்கு
வடமதுரை, ஆக. 7: அய்யலூர் கருஞ்சின்னானூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பகவதியம்மன், பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்ள அரசியல் பிரமுகர்களை அழைத்து வரக்கூடாது என ஊர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விழா கடைசி நாளில் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதை கண்டித்து உள்ளூரை சேர்ந்த சிலர் கட்சியினரின் வாகனங்களை மறித்து தகராறு செய்தனர்.
பின்னர் அவர்கள் சென்ற சிறிதுநேரத்தில் சிலர் கட்சி நிர்வாகி ஒருவரின் மாட்டு கொட்டகை, வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் அப்பகுதியைசேர்ந்த வீரமலை, சங்கன், ஜெயக்குமார், கருப்பையா உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிந்து இதில் தற்காலிக வங்கி ஊழியரான பொன்னுச்சாமி (30) என்பவரை கைது செய்தனர்.