பழநியில் இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றியது
பழநி, நவ.6: பழநியில் நேற்று மாலை, இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றியது. பழநியில் நேற்று மாலை பல இடங்களில் இடி மற்றும் மின்னல் இருந்தது. இதில் இடி தாக்கியதில் பழநி டவுன், மதினா நகரைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவருக்கு சொந்தமான இடத்திலிருந்த தென்னை மரத்தில் தீ பிடித்தது.
Advertisement
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு நிலையை அலுவலர் காளிதாஸ் தலைமையில் விரைந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement