ஒட்டன்சத்திரத்தில் மின்மாற்றியில் பற்றி எரிந்த தீ அணைப்பு
ஒட்டன்சத்திரம், நவ.6: ஒட்டன்சத்திரத்தில் மின்மாற்றியில் பற்றி தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதனருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இப்பகுதியில் மிகவும் தாழ்வாக உயர் மின்னழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வணிக வளாகத்திற்குள் சென்ற சரக்கு வாகனத்தின் மேற்பகுதி, உயிரழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் ஏற்பட்ட மின் உராய்வால், அருகில் உள்ள மின்மாற்றியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின் இணைப்பை துண்டித்து மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.