மாநில வூசு போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
திண்டுக்கல், ஆக. 6: கோயம்புத்தூரில் கேலோ இந்தியா மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் மாநில அளவிலான வூசு உமன் லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 18 மாணவிகள், பயிற்சியாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் கலந்து கொண்டனர்.
இதில் மாணவிகள் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய வூசு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.