தாடிக்கொம்பு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல், அக். 4: தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப்பிற்கு தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐக்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது செட்டிநாயக்கன்பட்டி டாஸ்மாக் அருகே சட்டவிரோத மாக மதுபானம் விற்பனை செய்த திண்டுக்கல் கிழக்கு மரிய நாதபுரத்தை சேர்ந்த அருண்பிரசாத் (27), கள்ளிப்பட்டி அருகே மதுபானம் விற்பனை செய்த அகரம் பகுதியை சேர்ந்த பாரதி (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 54 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement