நத்தம் குட்டுப்பட்டியில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
நத்தம், நவ. 1: நத்தம் ஒன்றியம் குட்டுப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், சமூக நலத்திட்ட தனி தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிந்திரன் வரவேற்றார். இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பின்னர் சிலரது மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ஜான் பீட்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல், தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துமனை டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் துறை அலுவலர்கள்- பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.