வத்தலக்குண்டுவில் கண் பரிசோதனை முகாம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில் குமார் பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாமுனி வரவேற்றார்.
Advertisement
வடக்கு ஒன்றிய செயலாளர் கேபி. முருகன் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொதுமக்களுக்கு கண் சம்பந்தமான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கார்த்திக், சின்னா, ரமேஷ் துரை, வினோத், யுவன் கார்த்திக், சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமுக்கு முதலில் வந்த 100 பேருக்கு ரீடிங் கிளாஸ் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Advertisement