வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு பள்ளி சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சத்தியதாரா தீர்ப்பு வழங்கினார். இதில் முருகேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Advertisement