கொடைக்கானல் நகராட்சியில் வார்டு சபை கூட்டங்கள்
Advertisement
கொடைக்கானல், அக். 29: கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டங்கள் நேற்று நடந்தன. அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். இக்கூட்டங்களில் வார்டுகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகளின் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். முன்னதாக 17வது வார்டில் நகர் மன்ற தலைவர் தலைமை வகித்து வார்டு சபை கூட்டத்தை துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் சங்கர் முன்னிலை வகித்தார். 24 வார்டு சபை கூட்டங்களிலும் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உடனடியாக தீர்வு ஏற்படுத்தப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.
Advertisement