கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருமலைக்கேணி கோயிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
Advertisement
கோபால்பட்டி, அக்.28: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் விழா நடந்தது. முன்னதாக கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் நேற்று மாலை நடந்தது.
Advertisement