வத்தலக்குண்டு பகுதியில் பைக் திருடிய 3 பேர் கைது
Advertisement
வத்தலக்குண்டு, செப். 23: வத்தலக்குண்டு பகுதியில் பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் துணை மின்நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் பைக்கில் சென்றார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல் அருகே சீலப்பாடியைச் சேர்ந்த வெள்ளைக்காளை மகன் கண்ணன் (24) என்பதும், பைக் திருடன் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அவர் சீலப்பாடியைச் சேர்ந்த சவுந்தரராஜ் மகன் வெங்கடேஷ் (25), விஜயன் மகன் மணிகண்டன் (26) ஆகியோருடன் சேர்ந்து வத்தலக்குண்டு பகுதியில் பைக் திருடியது தெரிய வந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement