பழநியில் வாலிபர் தற்கொலை
பழநி, டிச. 12: பழநியில் உள்ள குபேரபட்டிணத்தை சேர்ந்தவர் சரவணன் (20). டீக்கடை தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவருக்கு பெற்றோருடன் கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மனமடைந்த நிலையில் காணப்பட்ட சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement