கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணி தேர்வை 1761 பேர் எழுதினர்
திண்டுக்கல், அக். 12: திண்டுக்கல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடந்தது. 92 பணியிடங்களுக்கு 2136 தேர்வர்கள் கலந்து கொள்ள தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டது. தேர்வில் 1761 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வை திண்டுக்கல் மாவட்ட இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி நேரில் பார்வையிட்டார். அப்போது, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் சுபாஷினி மற்றும் துணைப்பதிவாளர்கள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement