திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்
திண்டுக்கல், ஆக.12: திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 250 மனுக்கள் பெற்றார்.
அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், டிஆர்ஓ ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.